உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / திலக்நகர் மாரியம்மன் கோவிலில் பூக்கரக தீ மிதி விழா இன்று துவக்கம்

திலக்நகர் மாரியம்மன் கோவிலில் பூக்கரக தீ மிதி விழா இன்று துவக்கம்

திலக்நகர்: பெங்களூரு திலக்நகர், ஜெயநகர் பகுதியில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில், 53வது ஆண்டு பூக்கரக தீ மிதித்திருவிழா, இன்று துவங்கி அடுத்த மாதம் 1ம் தேதி வரை எட்டு நாட்கள் நடக்கிறது.இன்று காலை கோ பூஜை, ஹோம பூஜை நடக்கிறது. பின்னர் கோவிலின் முன்பகுதியில் பொங்கல் வைத்தல், திருவிளக்கு பூஜை; 26ம் தேதி பால்குட ஊர்வலம், பாலாபிஷேகம்; 27ம் தேதி காலையில் தீர்த்த காளியம்மனுக்கு சீர்வரிசை, சக்தி கரக வழிபாடு, சந்தன அலங்காரம்; 28ம் தேதி காலையில் சுமங்கலி பூஜை, மாலையில் முளைப்பாரி ஊர்வலம், இரவில் பைரசந்திரா ஏரியில் தெப்ப தீப உத்சவம், கங்கை பூஜை; 29ம் தேதி மதியம் 1:00 மணிக்கு அன்னதானம்; 30ம் தேதி மதியம் 3:00 மணிக்கு அக்னி குண்ட பூஜை, மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு கரக அலங்காரம், இரவு 8:00 மணிக்கு தீமிதி விழா; 31ம் தேதி மாலை 6:00 மணிக்கு தேர் ஊர்வலம்; 1ம் தேதி காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை சேர்மன் ஜி.சாமண்ணா, தலைவர் ஒய்.ராதாகிருஷ்ணா, துணை தலைவர் எம்.கே.முத்துகுமார், பொது செயலர் பி.பழனி, பொருளாளர் பி.வில்வநாதன் ஆகியோர் செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !