உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  இந்திரா உணவக சமையல் அறைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

 இந்திரா உணவக சமையல் அறைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

பெங்களூரு: இந்திரா உணவகங்களின் சமையல் அறைகளை, உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பெருச்சாளிகள் அதிகமிருப்பதை கண்டு, அதிர்ச்சி அடைந்தன். பெங்களூரின், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் திடீர் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு அதிகாரிகள், அங்கு அழுகிய இறைச்சி, காய்கறிகள், கெட்டுப்போன பாலை கண்டுபிடித்தனர். சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போது அதிகாரிகளின் பார்வை, இந்திரா உணவகங்களின் சமையல் அறைகள் மீது பதிந்துள்ளது. பெங்களூரின் கொட்டிகெரே, லிங்கராஜபுரா உட்பட பல இடங்களில் உள்ள, இந்திரா உணவகங்களின் சமையல் அறைகளில், நேற்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு சுகாதாரமான சூழ்நிலை உள்ளதா, காய்கறிகள், அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்கள் தரமாக உள்ளனவா என்பதை, ஆய்வு செய்தனர். சமையலுக்கு காலாவதியான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என, உன்னிப்பாக கவனித்தனர். கொட்டிகெரேவின், இந்திரா உணவக சமையல் அறை, மிகவும் அசுத்தமாக இருந்தது. பெருச்சாளிகள் அதிகம் இருந்தன. இதை கண்டு கோபமடைந்த அதிகாரிகள், சமையல் அறைக்கு சீல் வைத்தனர். இந்திரா உணவக ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அளிப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !