மேலும் செய்திகள்
நண்பரை குத்தியவர் கைது
03-Aug-2025
மைசூரு : கரடி தாக்குதலில் ஒரு கண்ணை இழந்த ஒப்பந்த வனத்துறை ஊழியருக்கு, வனத்துறையினர் நிதியுதவி வழங்கினர். மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டேயின் சோகஹள்ளியை சேர்ந்தவர் மதன், 47. வனத்துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை 15ம் தேதி நாகரஹொளே தேசிய பூங்காவுக்கு உட்பட்ட அந்தரசந்தே வனப்பகுதியில், சக ஊழியர்கள் நான்கு பேருடன், மதன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, புதரில் இருந்து திடீரென வந்த கரடியை பார்த்து அனைவரும் தெறித்து ஓடினர். மதனை பிடித்து கொண்ட கரடி, அவரை சரமாரியாக தாக்கியதில், முகம், வலது கண்ணில் கடும் பாதிப்பு ஏற்பட்ட து. மதனை மீட்ட ஊழியர்கள், மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் வலது கண் பார்வையை இழந்தார். இவருக்கு மனைவி, மூன்று பிள்ளைகள் மற்றும் தந்தை உள்ளனர். இவரின் வருமானத்தை நம்பியே குடும்பம் இருந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், நேற்று மதனை சந்தித்து, நிதியுதவி வழங்கினர். தன் மகனுக்கு வனத்துறையில் வேலை வாய்ப்பு கேட்ட மதனுக்கு, உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
03-Aug-2025