உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆண்களை பெண்களாக மாற்றும் காங்., அரசு பா.ஜ., மாஜி எம்.பி., முனிசாமி குற்றச்சாட்டு

ஆண்களை பெண்களாக மாற்றும் காங்., அரசு பா.ஜ., மாஜி எம்.பி., முனிசாமி குற்றச்சாட்டு

கோலார்: ''கிராம மேம்பாட்டுத் துறையில் பெண்களுக்கான வேலை வாய்ப்பில் ஆண்களை பெண்களாக மாற்றி, அவர்களுக்கு சேலை கட்டி, பணத்தை கொள்ளை அடித்து வருகின்றனர்,'' என, கோலார் தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.பி., முனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.கோலாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின், தானே முதல்வர் என்கிறார் சிவகுமார்; ஐந்தாண்டுகளுக்கும் தானே முதல்வர் என்கிறார் சித்தராமையா. இவர்களை அடுத்து, தனக்கும் தகுதி உள்ளது என்பதை வெளிப்படுத்த, 'எங்கள் ஆட்சி ஏற்பட்டால் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை தடை செய்வேன்' என்கிறார் பிரியங்க் கார்கே. கிராம மேம்பாட்டுத் துறை அமைச்சரான அவர், வாய்க்கு வந்தவாறு எதையெதையோ பேசுகிறார்.பல்வேறு துறைகளில் வசூல் வேட்டை நடத்தப்படுகிறது. ஊழல் நிறைந்த அரசை பதவியில் இருந்து இறக்கும் வரை பா.ஜ.,வின் போராட்டம் தொடரும்.கிராம மேம்பாட்டுத் துறையில் பெண்களுக்கான வேலை வாய்ப்பில் ஆண்களை பெண்களாக மாற்றி, அவர்களுக்கு சேலை கட்டி, பணம் கொள்ளையடித்து வருகின்றனர். ஒரு இடத்தில் எடுக்கப்பட்ட படத்தையே 10 இடங்களில் காண்பித்து, வேலை செய்ததாக பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.போதைப் பொருள் வழக்கில், காங்கிரசின் முக்கிய தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது. இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஓட்டு வங்கிக்காக பாகிஸ்தான், வங்கதேசத்தவருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கி அரசியல் நடத்துகின்றனர். வெளிநாட்டவருக்கு காபி தோட்டங்களில் வேலைவாய்ப்பு வழங்கி வருகின்றனர். இதற்கெல்லாம் முடிவு கட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.கோலார் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் வேணுகோபால், மாவட்ட பொதுச்செயலர் அப்பிராஜு, துணைத் தலைவர் கிருஷ்ண மூர்த்தி, பிரவீன் கவுடா, கம்போடி நாராயணசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை