உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய மகனுக்கு வக்காலத்து வாங்கிய மாஜி எம்.எல்.ஏ.,

சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய மகனுக்கு வக்காலத்து வாங்கிய மாஜி எம்.எல்.ஏ.,

விஜயபுரா: 'என் மகன் சுங்கச்சாவடி ஊழியரை தாக்கியது சாதாரண விஷயம்' என, முன்னாள் பா.ஜ., - எம்.எல்.ஏ., விஜுகவுடா பாட்டீல் கூறி உள்ளார். விஜயபுரா மாவட்டம், முத்தேபிஹல் தொகுதி முன்னாள் பா.ஜ., - எம்.எல்.ஏ., விஜுகவுடா பாட்டீல். இவரது மகன் சமர்த்தகவுடா பாட்டீல் நேற்று முன்தினம், விஜயபுரா - கலபுரகி நெடுஞ்சாலையில் காரில் தன் நண்பர்களுடன் பயணம் செய்தார். அப்போது, கன்னோலி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் கட்ட மறுத்து, அங்கு பணிபுரியும் ஊழியர் சங்கப்பாவை, தன் நண்பர்களுடன் இணைந்து தாக்கினார். இதில், காயமடைந்த சங்கப்பா தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இணையத்தில் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. பலரும் 'மாஜி' எம்.எல்.ஏ., மகனை கைது செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதுவரை தாக்குதலி ல் காயமடைந்த நபர், புகார் எதுவும் கொடுக்கவில்லை. போலீசாரும் தாமாக முன்வந் து வழக்குப் பதிவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து முன்னாள் பா.ஜ., - எம்.எல்.ஏ., விஜுகவுடா பாட்டீல் கூறியதாவது: என் மகன் காரில் தன் நண்பர்களுடன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சுங்கச்சாவடியில் வேலை செய்யும் ஊழியர், கார் யாருடையது என கேட்டுள்ளார். இதற்கு என் மகன் மாஜி எம்.எல்.ஏ., விஜுகவுடாவின் கார் என கூறினார். அப்போது, என்னை பற்றி சுங்கச்சாவடி ஊழியர், ஒருமையில் பேசி உள்ளார். இதனால், என் மகனுக்கு ஆத்திரம் ஏற்பட்டு சுங்கச்சாவடி ஊழியரை தாக்கினான். இது ஒரு சாதாரண விஷயம். இதை பலரும் ஊதி பெரிதாக்குகின்றனர். எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும்படி கூறுகின்றனர். எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும் அளவிற்கு என் மகன் என்ன குற்றம் செய்தார்? கொலை செய்தாரா அல்லது கொள்ளை அடித்தாரா? இருப்பினும், பலரும் அவர் தவறு செய்தார் என கூறுகிறீர்கள். ஒரு வேளை அவர் செய்தது தவறாக இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ