உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மாஜி எம்.எல்.ஏ., சீனிவாசய்யா காலமானார்

 மாஜி எம்.எல்.ஏ., சீனிவாசய்யா காலமானார்

கோலார்: கோலார் தொகுதி ஜனதா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., சீனிவாசய்யா, 94, நேற்று காலமானார். இவர், முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேவின் நெருங்கிய நண்பர். கோலாரில் பிரபல வக்கீல். கோலார் சட்டசபைத் தொகுதியில் 1983, 1985ல் ஜனதா கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். ஜனதா பரிவார் இயக்கத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். இவருக்கு மனைவி, நான்கு மகன்கள் உள்ளனர். வயது முதிர்ச்சியால் இறந்த இவருக்கு, அவரது சொந்த ஊரான ஏகம்பள்ளியில் இறுதி சடங்கு நடக்கிறது. இவரது உடலுக்கு அனைத்து கட்சி பிரமுகர்கள், வக்கீல்கள் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை