பாமுல் இயக்குநர் பதவிக்கு காங்., மாஜி எம்.பி., போட்டி
பெங்களூரு: ''கட்சி தலைமை உத்தரவால், பாமுல் எனும் பெங்களூரு பால் கூட்டுறவு சங்க இயக்குநர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தேன்,'' என, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் தெரிவித்தார்.பெங்களூரு ரூரல் காங்கிரஸ் எம்.பி.,யாக இருந்த சுரேஷ், கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத்திடம் தோல்வி அடைந்தார்.அதன் பின், கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். சென்னபட்டணா இடைத்தேர்தலிலும் கூட, கட்சியினர் வலியுறுத்தியும் போட்டியிடவில்லை.இந்நிலையில், பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெங்களூரு பால் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யுமாறு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. எனவே, நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தேன்.இயக்குநர் பதவிக்கு ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் போட்டியிடுகிறாரா என்பது எனக்கு தெரியாது.அசோக், எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். உங்களுக்கு (அசோக்) தகுதி இருக்கிறதோ, இல்லையோ, நான் உங்களுக்கு தகவல்கள் அளிக்கிறேன். உத்தரஹள்ளி நிலம் அபகரிப்பு பற்றி பேச தயாராக இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.