பைக்கிலிருந்து தவறி விழுந்த மாஜி எஸ்.ஐ., பலி
முல்பாகல்: முல்பாகலின் தாயலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் டி.வி. சீனிவாஸ், 63. போலீஸ் எஸ்.ஐ.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமான விளைநிலம், ஆந்திர மாநிலம் வி.கோட்டா என்ற இடத்தில் உள்ளது. அந்த விளைநிலத்திற்கு, நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில், சீனிவாஸ் சென்று கொண்டிருந்தார். தாசர்ஹள்ளி என்ற கிராமத்தின் வழியாக செல்லும் போது தவறி கீழே விழுந்தார். அதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். பின், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.