சாலை விபத்தில் நால்வர் பரிதாப பலி
உடுப்பி: 'குரூசர்' வேன் மீது அரசு பஸ் மோதிய விபத்தில், நால்வர் உயிரிழந்தனர். உடுப்பி மாவட்டம், கார்கலா தாலுகாவின், தேவல கானபுரா அருகில் நேற்று காலை, 'குரூசர்' வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த அரசு பஸ், வேன் மீது மோதியது. மோதிய வேகத்தில் வேனின் முன் பகுதி நொறுங்கியது. இதில் பயணித்த சேத்தன் மாதரா, 18, ரோஹிதாஸ் மாதரா, 19, மல்லம்மா, 45, ஓட்டுநர் மானப்பா, 30, ஆகியோர் உயிரிழந்தனர். தேவல கானபுரா கிராமத்தை சேர்ந்த குடும்பத்தின் 12 பேர், குரூசர் வேனில் உடுப்பி மாவட்டத்துக்கு, சுற்றுலா சென்றுள்ளனர். நேற்று முன்தினம் மாலை, கார்கலாவில் இருந்து உடுப்பிக்கு வரும் வழியில் விபத்து நடந்தது தெரிந்தது. மீதம் ஒன்பது பேர் பலத்த காயமடைந்தனர். சங்கீதா என்பவருக்கு ஒரு கையும், ஒரு காலும் துண்டானதாக தெரிய வந்துள்ளது. தகவலறிந்து அங்கு வந்த உடுப்பி போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.