உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சாலை விபத்தில் நால்வர் பலி

சாலை விபத்தில் நால்வர் பலி

சிக்கபல்லாபூர்: கார் மற்றும் பொலிரோ வாகனம் இடையே ஏற்பட்ட விபத்தில், நால்வர் உயிரிழந்தனர். சிக்கபல்லாபூர் நகரின், தேசிய நெடுஞ்சாலை – 44ல், நந்தி மலை போலீஸ் நிலையம் முன்பாக, நேற்று மதியம் வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை டிவைடரில் மோதி, பக்கத்து சாலைக்கு பாய்ந்தது. எதிரே வந்த பொலிரோ வாகனம் மீது மோதியது. மோதிய வேகத்தில் காரில் இருந்த தினேஷ், 40, வைஷ்ணவ், 28, ஜெகதீஷ், 26, படேல், 30, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். விபத்தில் இறந்தவர்கள் பெங்களூரின் எலஹங்காவை சேர்ந்தவர்கள். நண்பர்களான இவர்கள் தேவனஹள்ளியில் இருந்து, சிக்கபல்லாபூருக்கு காரில் ஜாலி ரைடு செல்லும் போது, விபத்து நடந்துள்ளது. ஓட்டுநரின் அதிகமான வேகமே, விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக, நந்தி மலை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ