பொது இடத்தில் அடாவடி நான்கு ரவுடிகள் கைது
சந்திரா லே - அவுட்: பொதுமக்களிடம் வாளை காட்டி மிரட்டியதுடன், இரண்டு கார்களின் கண்ணாடியை உடைத்த, நான்கு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு, சந்திரா லே - அவுட்டின் அருண், 24, பிரஜ்வல், 23, திலீப், 22, ரவி, 22. ரவுடிகளான இவர்கள் மீது சந்திரா லே - அவுட், ஞானபாரதி போலீஸ் நிலையங்களில் கொள்ளை, மிரட்டி பணம் பறித்த வழக்குகள் உள்ளன. கடந்த 16ம் தேதி இரண்டு பைக்குகளில் நான்கு பேரும், சந்திரா லே - அவுட், ஞானபாரதி, காமாட்சிபாளையா, மாகடி ரோடு பகுதியில், கையில் வாளுடன் வலம் வந்தனர். 'இது எங்க ஏரியா, யாரும் உள்ளே வர கூடாது' என்று கூச்சலிட்டபடி சென்றனர். சாலையில் நடந்து சென்ற சிலரை வழிமறித்து, வாளை காட்டி மிரட்டினர். பின், இரண்டு கார்களின் கண்ணாடிகளை, வாளால் உடைத்துவிட்டுச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. ரவுடிகள் அட்டகாசம் குறித்து போலீசில் யாரும் புகார் செய்யவில்லை. சந்திரா லே - அவுட் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ரவுடிகள் நான்கு பேரும், தமிழகத்தின் ஓசூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது. நேற்று காலை அவர்களை, போலீசார் கைது செய்தனர்.