உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கே.பி.எஸ்., மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி

கே.பி.எஸ்., மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி

பெங்களூரு : ''கர்நாடக பப்ளிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பஸ் வசதி செய்ய கல்வித்துறை திட்டம் வகுத்துள்ளது,'' என தொடக்க கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:அரசு பள்ளிகள், கே.பி.எஸ்., எனும் கர்நாடக பப்ளிக் பள்ளிகளை மேம்படுத்த மாநில அரசு பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சரியான கட்டடம், அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில் பிரச்னைகள் தீர்க்கப்படும்.கே.பி.எஸ்.,களில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பஸ் வசதி செய்யப்படும். இப்பள்ளிகளில் ஏழை மாணவர்களே, அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இங்கு எல்.கே.ஜி., முதல் பி.யு.சி., வரை கல்வி கிடைக்கிறது. இவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்கிறது. ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படாமல், 20,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இலவச பள்ளி பஸ் திட்டமும் விரைவில் துவக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை