மேலும் செய்திகள்
அரிய வகை பச்சோந்தி பிடிபட்டது
16-Oct-2025
துமகூரு: துமகூரில் பசுவின் வாலை வெட்டி சமூக விரோதிகள் அட்டகாசம் செய்து உள்ளனர். துமகூரு நகரின் அசோக் நகர், வித்யாநகர், எஸ்.ஐ.டி., பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒரு பசு சுற்றிக்கொண்டிருந்தது. இந்த பசுவுக்கு அப்பகுதியில் இருக்கும் கடைக்காரர்கள், வீட்டு உரிமையாளர்கள் என பலரும் பழங்களை உணவாக கொடுத்து வணங்கி வந்தனர். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சில சமூக விரோதிகள், ஆத்திரம் அடைந்து உள்ளனர். அவர்கள், நேற்று முன்தினம் பசுவின் வாலை வெட்டி உள்ளனர். இதை பார்த்த அப்பகுதியினர் பஜ்ரங் தள் தொண்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், பசுவை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வைத்தனர். துமகூரு நியூடவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Oct-2025