உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ‘நோ பார்க்கிங்’கில் வாகனம் நிறுத்தினால் அபராதம் வசூலிக்க ஜி.பி.ஏ., திட்டம்

‘நோ பார்க்கிங்’கில் வாகனம் நிறுத்தினால் அபராதம் வசூலிக்க ஜி.பி.ஏ., திட்டம்

பெங்களூரு: ‘நோ பார்க்கிங்’கில் வாகனம் நிறுத்தினால் அபராதம் வசூலிக்க ஜி.பி.ஏ., திட்டமிட்டு உள்ளது. ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், பெங்களூரு மக்களிடமிருந்து பல வகைகளில் வரி மற்றும் அபராதம் விதிப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. வீட்டின் முன் வாகனத்தை நிறுத்த கட்டணம்; இறைச்சி கடை உரிமையாளர்களிடம் இறைச்சி கழிவு சேகரிக்க கட்டணம் என்று பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அவ்வகையில், ‘நோ பார்க்கிங்’கில் வாகனங்களை நிறுத்தினால், ஜி.பி.ஏ., சார்பில் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதாவது, நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தினால், போக்குவரத்து போலீசார் சார்பில் அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். இத்துடன் ஜி.பி.ஏ., சார்பிலும் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனத்துக்கு 200 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்துக்கு 500 ரூபாயும் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. ஜி.பி.ஏ.,வுக்கு சொந்தமான பகுதியில் வாகனத்தை நிறுத்துவதால் அபராதம் விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது, பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி அளித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை