ம.ஜ.த., ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.டி.தேவகவுடா நீக்கம்
பெங்களூரு: ம.ஜ.த., 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.டி.தேவகவுடா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கிருஷ்ண ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளார். ம.ஜ.த., 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மாநில தலைவர் குமாரசாமி, புதிய ஒருங்கிணைப்பு குழுவில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். இக்குழுவின் தலைவராக இருந்த ஜி.டி.தேவகவுடாவுக்கு பதிலாக, முன்னாள் துணை சபாநாயகர் கிருஷ்ண ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளார். ஒருங்கிணைப்பு குழு கன்வீனராக அரகலக்கூடு எம்.எல்.ஏ., மஞ்சு, உறுப்பினர்களாக முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா வெங்கடப்பா நாயக், முன்னாள் அமைச்சர் ரேவண்ணா, எம்.பி., மல்லேஸ் பாபு, முன்னாள் அமைச்சர்கள் தம்மண்ணா, ஹனுமந்தப்பா, குமாரசாமி, புட்டராஜு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிவசங்கர், திம்மராயப்பா, மஞ்சுநாத், தொட்டப்ப கவுடா பாட்டீல், பிரசன்ன குமார், எம்.எல்.ஏ.,க்கள் கரேம்மா நாயகா, நெமிராஜ் நாயகா, சம்ருத்தி மஞ்சுநாத், சரணுகவுடா கந்தாகுரா, எம்.எல்.சி., இன்சாரா கோவிந்தராஜு, மூத்த தலைவர் சந்திரசேகர். கட்சியின் உயர்மட்ட அரசியல் விவகார குழு தலைவராக மத்திய அமைச்சர் குமாரசாமி, அழைப்பாளராக சட்டசபை ம.ஜ.த., துணைத்தலைவர் சாரதா பூர்யா நாயக், முன்னாள் அமைச்சர் பன்டேப்பா காசம்பூர், மகேஷ், வெங்கடராவ், நாடகவுடா, சுரேஷ் பாபு, எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணப்பா, போஜேகவுடா, முன்னாள் எம்.எல்.ஏ., திப்பேசாமி, மாநில இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி. பிரசார குழு தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ., தத்தா, உறுப்பினர்களாக முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அஸ்வின் குமார், அன்னதானி, ரவீந்திரா ஸ்ரீகண்டையா, சுரேஷ் கவுடா, எம்.எல்.ஏ.,க்கள் பாலகிருஷ்ணா, எம்.எல்.சி.,க்கள் ஷ்ரவணா, ஜாவரே கவுடா, சூரஜ் கவுடா, ராஜு கவுடா, ஹரிஷ் கவுடா, ஸ்வரூப் பிரகாஷ், மஞ்சுநாத், விவேகானந்தா, மஞ்சே கவுடா, மூத்த தலைவர் சுதாகர் ஷெட்டி. ஒரு பொறுப்பாளர் ஒழுங்குமுறை குழு தலைவராக முன்னாள் அமைச்சர் நாகராஜய்யா, உறுப்பினர்களாக முன்னாள் எம்.பி., குபேந்திர ரெட்டி, எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடசிவ ரெட்டி, மஞ்சுநாத், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் லிங்கேஷ், மகாதேவா, சவுத்ரி ரெட்டி, சுதாகர்லால், நிசர்க நாராயணசாமி, சீனிவாசமூர்த்தி. பெங்களூரு மத்திய, மேற்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு மாநகராட்சிகளின் ம.ஜ.த., பொறுப்பு குழு தலைவராக, எம்.எல்.ஏ., மஞ்சு, உறுப் பினர்களாக கிருஷ்ணப்பா, ஷ்ரவணா, ஜாவரே கவுடா, மஞ்சே கவுடா, நிகில் குமாரசாமி, கிருஷ்ணா ரெட்டி, சுரேஷ் கவுடா, மஞ்சுநாத், ரமேஷ் கவுடா, திப்பே சுவாமி , நாராயணசாமி, நாகராஜய்யா, பிரகாஷ், மாநில மகளிர் பிரிவு தலைவி ரஷ்மி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.