தங்கவயல் செக் போஸ்ட்!
வேளாண் உற்பத்தி மார்க்கெட்டிங் டைரக்டர் பதவிக்கு, 'ஒரு பூவின் ரேட்டு' 1.5 சி கொடுத்து கோல்டு சிட்டிகாரரிடம் வாங்கிட்டாங்கன்னு 'மாஜி' மந்திரி போட்டு உடைத்திருக்காரு. இது மாவட்டத்தில் சூறாவளியை ஏற்படுத்தி இருக்கு.இது பொய் என்றால், 'கை'காரரை எதிர்த்து ஏன் போட்டியிடவில்லை. வேட்பு மனுவை ஏன் வாபஸ் வாங்க வேணும். வாபஸ் பெற நெருக்கடி கொடுத்தது யார். வாங்கிய தொகையில் எத்தனை பேருக்கு கமிஷன். இதனை மறைக்க தான், மூன்று கலர் கொடியை பிடிக்க வெச்சு, சிட்டியில் ரவுண்ட்ஸ் வர, யூத்களை தெருவுக்கு அழைத்து வரணுமா. இந்த ஒரு ஊர்கோலம், ஊழல் கண்ணை மறைச்சிடுமான்னு கதா காலட்சேபம் நடத்துறாங்க.இரண்டு மாவட்டங்களுக்கான ஒரு கூட்டுறவு வங்கியின் 'சேர்மன்' பதவிக்கு இன்னும் தேர்தல் நாள் முடிவாகல. முன்பு இருந்தவரை, மீண்டும் சேர்மன் ஆக்க விட மாட்டோம்னு கை கார மெகா கூட்டணி, தங்களது அதிகாரத்தை காண்பித்து வர்றாங்க.கோல்டு சிட்டி, ப.பேட்டை ரெண்டு தொகுதி கைக்காரங்களோட ஓட்டுகள் இப்ப உள்ள ஆளுக்கு தான் சாதகமாக இருக்குதாம். இருந்தாலும் அவரை மீண்டும் சேர்மன் ஆக்க விடாமல் தடுக்க கால்குலேஷன் போட்டு வராங்க. இதுக்காக பல வகையில் சூழ்ச்சி வலைகள் பின்னுறாங்க. அதனால, அந்த நபரு, தன் உயிருக்கு ஆபத்துன்னு சொல்லி அனுதாபம் பெறும் வேலைகளும் நடக்குது.இன்னொரு புறம், கோலாரு அசெம்பிளிக்காரருக்கு மந்திரி பதவி வேணாமாம். இந்த வங்கித் தலைவர் பதவியை கேட்டு, கோதாவில் இறங்கியதா சொல்றாங்க. கிட்டதட்ட அவருக்கு 'சேர்மன்' பதவிக்கு ஓ.கே., ஆகிவிட்டதாக தகவலு. ஆனால், அதெல்லாம் முடியாதுன்னு எதிர்தரப்பில சொல்றாங்க.