உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஐ.பி.எஸ்., சஸ்பெண்ட் ரத்து ஐகோர்ட்டில் அரசு அப்பீல்

ஐ.பி.எஸ்., சஸ்பெண்ட் ரத்து ஐகோர்ட்டில் அரசு அப்பீல்

பெங்களூரு: ஐ.பி.எஸ்., விகாஷ் குமாரின் சஸ்பெண்ட்டை ரத்து செய்த மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மாநில அரசு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.ஐ.பி.எல்., கோப்பையை வென்ற ஆர்.சி.பி., அணிக்கு ஜூன் 4ல், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. இதை காண வந்த ரசிகர்களில் 11 பேர், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தில், நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் விகாஷ் குமார் விகாஷ், சேகர் தேக்கண்ணவர் ஆகியோரை, மாநில காங்., அரசு சஸ்பெண்ட் செய்தது.இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரி விகாஷ் குமார் விகாஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த தீர்ப்பாயம், 'போலீசார் கடவுளோ அல்லது மந்திரவாதியோ அல்ல.'ஒருங்கிணைப்பு இல்லாமல், அவசர கதியில் ஆர்.சி.பி., அணி கொண்டாட்ட அறிவிப்பு வெளியிட்டதே 11 பேர் உயிரிழப்பு காரணம்' என கூறி, விகாஷ் குமார் விகாஷ் சஸ்பெண்ட்டை ரத்து செய்து உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மாநில அரசு நேற்று மனுத் தாக்கல் செய்தது. இம்மனு, நீதிபதிகள் பண்டித், நடாப் ஆகிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி வாதிடுகையில், ''மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் நேற்று முன்தினம் தான் சஸ்பெண்ட் ரத்து உத்தரவு வந்தது.''நேற்று காலையே பொறுப்பேற்க சீருடையில் அதிகாரி பணிக்கு வந்துவிட்டார். எனவே, இம்மனு மீது விரைவில் விசாரணை நடத்த வேண்டும்,'' என்று கேட்டுக் கொண்டார்.இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை