உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

 அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

பெங்களூரு: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் மார்ச் 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளனர். அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத் மேட்டி கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பது, மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குவதில், அரசு மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாநில அரசிடம் முன்வைத்து உள்ளோம். இந்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து, மாநில அரசிடம் பல முறை பேச்சு நடத்தியும் எந்த பயனும் இல்லை. எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், மார்ச் 11ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மார்ச் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை, அனைத்து மாவட்ட, தாலுகா அரசு மருத்துவமனைகளிலும் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாது. அரசு மருத்துவர்கள் யாரும் பணிக்கு வரமாட்டர்கள். ஆனால், அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் பணிக்கு வருகை தருவர். இந்த நாட்களில், எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், அவசர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வார்டுகளிலும் எந்த மருத்துவர்களும் பணிக்கு வரமாட்டர்கள். எனவே, போராட்டத்தின் தாக்கத்தை புரிந்து கொண்டு மாநில அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ