உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிரஜ்வல் ரேவண்ணா மனு அரசுக்கு 2 வாரம் அவகாசம்

பிரஜ்வல் ரேவண்ணா மனு அரசுக்கு 2 வாரம் அவகாசம்

பெங்களூரு: வீட்டு பணிப்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், தனக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோரி, பிரஜ்வல் ரேவண்ணா தாக்கல் செய்த மனு மீது ஆட்சேபனை தாக்கல் செய்ய, மாநில அரசுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் இரண்டு வாரம் அவகாசம் வழங்கி உள்ளது. ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா. தன் வீட்டு பணிப் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், ஆகஸ்ட் 2ம் தேதி, பிரஜ்வலுக்கு ஆயுள் தண்டனை வழங்கி, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிரஜ்வல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதிகள் முத்கல், வெங்கடேஷ் நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரஜ்வல் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'புகார் அளித்ததாக கூறப்படும் பெண், போலீசார் வந்தபோது நான் வீட்டில் இருந்ததாகவும், அவர்களை கண்டதும் பயத்தில் தப்பியோடியதாகவும், அவரை எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழு அழைத்துச் சென்று, புகார் அளிக்க வைத்தாகவும் தெரிவித்துள்ளார். 'இதன் மூலம், போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை விரட்டிச் சென்று, அவரை வலுக்கட்டாயமாக புகார் அளிக்க வைத்துள்ளனர்' என்றார். நீதிபதிகள், 'மனுதாரர் தரப்புக்கு ஆட்சேபனை தெரிவிக்க இரண்டு வாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. மனு மீதான விசாரணை நவ., 13க்கு ஒத்திவைக்கப்படுகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ