உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கழிப்பறையை கழுவ தண்ணீர் எடுத்த அரசு பள்ளி மாணவர்கள்

 கழிப்பறையை கழுவ தண்ணீர் எடுத்த அரசு பள்ளி மாணவர்கள்

மைசூரு: முதல்வர் சித்தராமையாவின் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் கழிப்பறையை மாணவர்கள் சுத்தப்படுத்தியது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மைசூரு, பிலகெரேஹுண்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தண்ணீர் தொட்டியில், இரண்டு மாணவர்கள் தண்ணீர் எடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. வீடியோவில், இரண்டு மாணவர்களும் தண்ணீர் தொட்டியில் இறங்கி வாளி மூலம் தண்ணீரை எடுக்கின்றனர். அந்த தண்ணீரை கொண்டு கழிப்பறை கழுவ ஆசிரியர் அறிவுறுத்தியதாக கூறுகின்றனர். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் கடந்த 20ம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். முதல்வர் சித்தராமையாவின் வருணா சட்டசபை தொகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்பட்ட அவல நிலை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை