உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வாக்குறுதி திட்டங்கள் அரசு அதிரடி முடிவு

வாக்குறுதி திட்டங்கள் அரசு அதிரடி முடிவு

கொப்பால்: ''வரும் ஜூலை மாதம் முதல், தகுதியற்றவர்களுக்கு கிரஹ லட்சுமி மற்றும் கிரஹ ஜோதி திட்டங்கள் நிறுத்தப்படும்,'' என முதல்வரின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி தெரிவித்தார்.கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி:மாநிலத்தின் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும், ஐந்து வாக்குறுதி திட்டங்களுக்கு தலா 250 கோடி ரூபாய் செலவாகிறது. காங்கிரஸ் அரசின் திட்டங்கள், மக்களின் வீட்டு வாசலுக்கு சென்றடைகின்றன. ஆனால் இந்த இத்திட்டங்களால், தகுதியற்றவர்களும் பயன் அடைகின்றனர். உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே, அரசின் திட்டங்கள் கிடைக்க வேண்டும். தகுதியற்றவர்களுக்கு கிடைக்க கூடாது. இத்தகையவர்களை கண்டுபிடித்து, விசாரணை நடத்தப்படும். வரும் ஜூலை முதல் தகுதியற்றவர்களுக்கு கிரஹ ஜோதி, கிரஹலட்சுமி திட்டங்கள் கிடைக்காது. இதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ