உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சுயசார்பு இந்தியாவை உருவாக்க கைகோர்க்க கவர்னர் அழைப்பு

சுயசார்பு இந்தியாவை உருவாக்க கைகோர்க்க கவர்னர் அழைப்பு

பெங்களூரு: ''சுயசார்பு இந்தியாவை உருவாக்க, தொழில் முனைவோர் கைகோர்க்க வேண்டும்,'' என்று, கவர்னர் தாவர்சந்த் கெலாட் அழைப்பு விடுத்து உள்ளார்.பெங்களூரு முதலீட்டாளர்கள் மாநாட்டில், கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:கர்நாடகா, இந்தியாவின் முற்போக்கான மாநிலம். மாநிலத்தின் கடந்த கால பெருமை, தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி, இயற்கை வளம், சிறந்த மக்களின் சாதனை வரலாறு ஆகியவை தனித்துவமானவை. நாட்டில் முதலீடுகளை கவர்ந்து இழுப்பதில் கர்நாடகா முன்னணியில் உள்ளது.பசுமை ஹைட்ரஜன், மின்னணு உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு, மின் இயக்கம், உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் மாநிலம் முதலீடுகளை பெற்று உள்ளது.மொத்த ஏற்றுமதியிலும் முன்னணியில் உள்ளது. பெங்களூரில் 400க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் உள்ளன. இந்திய கண்டுபிடிப்பு குறியீட்டிலும் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.உலகின் மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்ட் அப்களை கொண்டு உள்ளது. நிதி உதவி, ஒப்பந்த எண்ணிக்கை, துணிகர மூலதனம், தனியார் பங்கு போன்ற அனைத்து விஷயத்திலும் முதலிடத்தில் உள்ளது.அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் பல பகுதிகள் அனைத்து வசதிகளையும், வாய்ப்புகளையும் கொண்டு வரும். நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள சிறு, குறு தொழில்களை வலுப்படுத்த வேண்டும்.கர்நாடகா எப்போதும் சிறு, குறு தொழிலை ஆதரிக்கிறது. சுயசார்பு இந்தியாவை உருவாக்க, தொழில்முனைவோர் கைகோர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை