மேலும் செய்திகள்
மின் வினியோகம் துண்டிப்பு கிராமப்புறங்களில் அவதி
12-Aug-2025
மைசூரு:கவுரி பண்டிகைக்காக, மூங்கில் முறங்கள் தயாராகி வருகின்றன. ஆர்டர்கள் குவிவதால், வியாபாரிகள் குஷி அடைந்துள்ளனர். இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் கவுரி விநாயகர் பண்டிகை கொண்டாட மக்கள் தயாராகின்றனர். நாளை கவுரி பண்டிகை, நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி வருகிறது. கவுரி பண்டிகை பெண்களுக்கு, மிகவும் மகிழ்ச்சியான பண்டிகையாகும். ஏன் என்றால் தாய் வீட்டில் இருந்து பரிசுகள் கிடைக்கும். பழைய மைசூரு பகுதிகளில் இந்த பண்டிகை, வெகு சிறப்பாக கொண்டாடப்படும். சம்பிரதாயம் கவுரி பண்டிகை நாட்களில், திருமணமான பெண்களுக்கு, தாய் வீட்டில் இருந்து மங்கள பொருட்கள் வருவது வழக்கம். மூங்கில் முறத்தில் புதுச்சேலை, ரவிக்கை, மஞ்சள், குங்குமம், பழங்கள், பச்சை நிற கண்ணாடி வளையல்கள் உட்பட பல பொருட்களை வைத்து மகளுக்கு கொடுப்பது சம்பிரதாயம். எனவே மூங்கில் முறங்களுக்கு அதிக மவுசு வந்துள்ளது. கவுரி பண்டிகை நாளில் மட்டுமே, மூங்கில் முறங்கள் அதிகமாக விற்பனையாகும். மற்ற நாட்களில் அவ்வளவாக பயன்படுவது இல்லை. பண்டிகைக்காக மைசூரில் அழகான மூங்கில் முறங்கள் தயாராகின்றன. நுாரொந்து விநாயகர் கோவில் வளாகத்தில் பெண்கள் மூங்கில் முறங்கள் பின்னுவதில் ஈடுபட்டுள்ளனர். நகர்ப்பகுதி, கிராமப்புறங்களில் வசிக்கும் பலரும், இங்கு வந்து முறங்களை வாங்கி செல்கின்றனர். ஒரு ஜோடி பெரிய முறங்களின் விலை 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உள்ளது. சைஸுக்கு தகுந்தவாறு முறங்கள் விற்கப்படுகிறது. ஆண்கள் பணி கவுரி பண்டிகை, திருமணங்கள் உட்பட சுப நிகழ்ச்சிகளுக்கு முறங்கள் பின்னி கொடுப்பது, இந்த பெண்களின் தொழிலாகும். முறங்கள் மட்டுமின்றி, கூடைகளும் பின்னுகின்றனர். ஆண்களும் கூட மூங்கில் முறங்கள் பின்னுகின்றனர். மூங்கில் முறங்கள் பின்னும் பார்வதி கூறியதாவது: கவுரி பண்டிகை பெண்களுக்கான பண்டிகையாகும். இந்த நாட்களில் தாய் வீட்டில் இருந்து மகள் களுக்கு மங்கள பொருட்களை கொடுத்து வாழ்த்துவர். இவற்றை மூங்கில் முறங்களில் வைத்து கொடுப்பது, காலங் காலமாக நடந்து வரும் சம்பிரதாயமாகும். சகோதரர்களும், தங்களின் சகோதரிகளுக்கு இது போன்று வழங்குகின்றனர். ஆண்டுதோறும் கவுரி பண்டிகை நாளில், மைசூரு மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்களும், பெண்களும் நுரொந்து விநாயகர் கோவில் வளாகத்தில் முகாமிட்டு, மூங்கில் முறங்கள் பின்னி, விற்பனை செய்கிறோம். நான் நஞ்சன்கூடில் இருந்து வந்துள்ளேன். மைசூரில் விளையும் மூங்கில் கம்புகள், முறங்கள் பின்ன பயன்படாது. எனவே மடிகேரியில் இருந்து கொண்டு வருகிறோம். பெரிய, சிறிய முறங்கள், மூங்கில் கூடைகள், விசிறி, பூஜை கூடைகள் என, பல பொருட்கள் தயாரிக்கிறோம். இது எங்கள் குலத்தொழில். இவ்வாறு அவர் கூறினார்.
12-Aug-2025