உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஜி.பி.ஏ., தேர்தல் விவகாரம் ஆணையம் விளக்கம்

 ஜி.பி.ஏ., தேர்தல் விவகாரம் ஆணையம் விளக்கம்

பெங்களூரு: ஜி.பி.ஏ., தேர்தல் நடத்த அவகாசம் வழங்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் பிரமாண பத்திரம் எதுவும் தாக்கல் செய்யவில்லை என, மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து உள்ளது. இது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜி.பி.ஏ.,யின் ஐந்து மாநகராட்சிகளுக்கும் தேர்தலை நடத்த ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. எனவே, தேர்தல் நடத்த செப்டம்பர், 30ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துறை கடிதம் வழங்கியிருந்தது. இந்த கடிதம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், தேர்தல் நடத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில், பிரமாண பத்திரம் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !