கர்நாடக கடலில் மூழ்கிய மஹா., மென் பொறியாளர்
உத்தரகன்னடா: மஹாராஷ்டிரா மாநிலம், புனேவை சேர்ந்தவர் ஜீவன் பட்டராயி, 26. இவர் புனேவில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றினார். தன் ஐந்து நண்பர்களுடன், உத்தரகன்னடா மாவட்டம், குமட்டா தாலுகாவுக்கு சுற்றுலா வந்திருந்தார். மூன்று நாட்களாக, கட்லே கடற்கரை அருகில் உள்ள, தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருந்தனர். சுற்றுலாவை முடித்து கொண்டு, நேற்று விடுதி அறையை காலி செய்துவிட்டு, புனேவுக்கு திரும்ப தயாராகினர். அதற்கு முன்னதாக கடற்கரையில் பொழுது போக்க சென்றனர். ஐவரும் கடலில் இறங்கி ரீல்ஸ் செய்தனர். 'ரீல்ஸ ் ' முடிந்து நண்பர்கள் கரைக்கு திரும்பினர். அப்போது ஜீவன் நீரில் விளையாடி கொண்டிருந்தார். பின்னால் வருவார் என, நினைத்து நண்பர்கள் முன்னே சென்றனர். ஆனால் அவர் வரவில்லை. ராட்சத அலைகளால் அடித்து செல்லப்பட்டார். நண்பர்கள் தேடிய போது, காணவில்லை. இது குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், கடலோர காவல்படை, தீயணைப்பு படையினர் ஜீவனை தேடுகின்றனர். இதுவரை அவர் கிடைக்கவில்லை.