உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஞானேஷ்குமார் ராஜினாமா ‘இண்டி’ கூட்டணி நாளை போராட்டம்

ஞானேஷ்குமார் ராஜினாமா ‘இண்டி’ கூட்டணி நாளை போராட்டம்

பெங்களூரு: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்யக்கோரி, பெங்களூரு சுதந்திர பூங்காவில் நாளை ‘இண்டி’ கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மாநில காங்., தலைவர் ஹரிபிரசாத் கூறி உள்ளார். பெங்களூரில், மாநில காங்., தலைவர் ஹரிபிரசாத் அளித்த பேட்டி: எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் நடந்த முறைகேடு மற்றும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை கண்டித்து, ‘இண்டி’ கூட்டணியினர், நாளை பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்துகின்றனர். ஞானேஷ்குமாருக்கு எதிராக மாவட்டம், தாலுகா, கிராம வாரியாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.முதலில், நாளை மாநில அளவில் போராட்டம் நடக்கும். இதையடுத்து, மாவட்ட, கிராம வாரியாக போராட்டம் துவங்கும். ஞானேஷ் ராஜினாமா செய்யும்வரை போராட்டம் தொடரும். பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் தேர்தல் ஆணையத்தை தவறாக பயன்படுத்தி, ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முயல்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை