மேலும் செய்திகள்
எடியூர் ஏரியில் சிலை கரைக்க தற்காலிக தடை
17-Sep-2026
ஹாசன்: ஹாசன் நகரின் தேவிகெரே ஏரியில் விநாயகர் சிலைகள் கரைப்பதால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடுவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். தள்ளுமுள்ளு ஏற்பட்டு அசம்பாவிதங்கள் நடக்கலாம். இதை மனதில் கொண்டு, ஏரியில் விநாயகர் சிலைகளை கரைக்க, ஹாசன் கலெக்டர் லதாகுமாரி தடை விதித்திருந்தார். ஆனால் தடையை மீறி, ஏரியில் சிலை கரைப்பு நடந்துள்ளது. இதனால் விளக்கம் கேட்டு ஹாசன் எஸ்.பி., ஷுபான்விதாவுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ‘இந்த நோட்டீசுக்கு நீங்கள் எழுத்து பூர்வமாக பதில் அளிக்க வேண்டும். பதில் அளிக் காவிட்டால், நீங்கள் கூற ஏதும் இல்லை என, முடிவு செய்து ஒழுங்கு நடவடிக்கைக்கு, சிபாரிசு செய்ய வேண்டி வரும்’ என்று கூறப்பட்டுள்ளது. ம.ஜ.த., – எம்.எல்.ஏ. ஸ்வரூப் பிரகாஷ் கூறுகையில், ‘‘கலெக்டர் யாருடைய பேச்சையும் கேட்கும் சூழ்நிலையில் இல்லை. எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அளித்துள்ளது சரியல்ல,’’ என்றார்.
17-Sep-2026