உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தரமற்ற அழகு சாதன பொருள் களமிறங்கும் சுகாதார துறை

தரமற்ற அழகு சாதன பொருள் களமிறங்கும் சுகாதார துறை

பெங்களூரு: கர்நாடகாவில் சமீப காலமாக, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவு வகைகளுக்கு, சுகாதாரத் துறை தடை விதித்து வருகிறது. சமீபத்தில், 'பாராசிட்டாமல்' உட்பட சில மருந்துகளை விற்க தடை விதித்தது.இந்நிலையில், தரமற்ற அழகுசாதன பொருட்களின் விற்பனை மீது நடவடிக்கை எடுக்க உள்ளது. இதன்படி, ஸ்டீராய்டு சார்ந்த கிரீம்கள், வைட்டமின் சி, டி கிரீம்கள், லிப்ஸ்டிக் போன்றவை குறித்து ஆய்வு நடத்தியது. இதில், பல பொருட்கள் தரம் குறைந்தவை, பக்க விளைவுகளை ஏற்படுத்துபவை என கண்டறியப்பட்டது.இத்தகைய அழகுசாதன பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை, ஆய்வகங்களுக்கு அனுப்பி, மருந்து கட்டுப்பாட்டு துறை சோதனை செய்ய உள்ளது. இதன்பின், பல நிறுவனங்களின் பொருட்கள் தடை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.'ஆய்வின் முடிவில் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் பொருட்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை