மேலும் செய்திகள்
திடீரென சாயும் கட்டடம் வாடகைதாரர்கள் இடமாற்றம்
30-Sep-2025
நெலமங்களா: உடல் நிலை பாதிப்பால் மனம் நொந்து, கோவில் அர்ச்சகர் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகாவின் சோழதேவனஹள்ளியில் வசித்தவர் அஸ்வத் நாராயணா, 54. இவரது குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக நெலமங்களாவில் உள்ள முனீஸ்வர சுவாமி கோவில் அர்ச்சகராக உள்ளனர். தற்போது அஸ்வத் நாராயணா அர்ச்சகராக பணியாற்றுகிறார். அர்ச்ச கர் பணியுடன், தனியார் தொழிற்சாலையிலும் இவர் பணியாற்றுகிறார். அஸ்வத் நாராயணா, உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்டார். சிறுநீரக பிரச்னை இருந்தது. இதனால் மனம் நொந்த அவர், நேற்று காலை தொழிற்சாலை பணிக்கு செல்வதாக கூறி சென்றார். அங்கு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் நிலை பாதிப்பால் தற்கொலை செய்து கொள்வதாக, கடிதம் எழுதி வைத்துள்ளார். நெலமங்களா போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Sep-2025