தர்ஷன் ஜாமினை எதிர்த்த மனு இன்று விசாரணை
பெங்களூரு : நடிகர் தர்ஷன் உட்பட 7 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட ஏழு பேருக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 18 ல் நடந்த விசாரணையின் போது, நடிகர் தர்ஷன் உட்பட ஏழு பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன் பின், இம்மனு, விசாரணைக்கு வரவில்லை. இதையடுத்து, கர்நாடக அரசு தரப்பு வக்கீல் அனில் நிஷானி, உச்சநீதிமன்றத்திடம் கேட்டு கொண்டார். அதற்கு நீதிமன்றம், ஏப்., 2ம் தேதி (இன்று) விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்' என தெரிவித்தது.தர்ஷனுக்காக மூத்த வக்கீல் கபில் சிபில் வாதிடுகிறார். கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தர்ஷனுக்கு ஜாமின் பெற்று தர இவர் வாதாடியது குறிப்பிடத்தக்கது.