மேலும் செய்திகள்
தத்த ஜெயந்தி விழா: டி.ஜி.பி., சலீம் ஆய்வு
17 minutes ago
மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது
19 minutes ago
ஹம்பி ரயிலை கவிழ்க்க சதியா?
20 minutes ago
தட்சிண கன்னடா: மங்களூ ரில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால், மங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த மூன்று விமானங்கள் வேறு ஊ ருக்கு திசை திருப்பி விடப்பட்டன. தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் நேற்று முன்தினம் இரவு 10:00 முதல் 11:00 மணி வரை விட்டல், புத்துார், பன்ட்வால், பெல்தங்கடி, சுள்ளியா, கடபா, முல்கியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. புத்துாரின் சாவனுார், பெருவஜேயில் தொடர் மழையும், பெல்தங்கடி, கல்மாட்கியில் இடியுடன் கூடிய மழையும் பெய்தது. மங்களூரு நகரில் பெய்த மழையால், பயணியர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மும்பை, பெங்களூரில் இருந்து வந்த உள்நாட்டு விமானங்கள் பெங்களூருக்கும்; துபாயில் இருந்து வந்த சர்வதேச விமானம், கேரளாவின் கண்ணுாருக்கும் திருப்பி விடப்பட்டன. அதன் பின், மழை குறைந்ததால், விமானங்கள் வழக்கம் போல் விமான நிலையத்தில் இறங்க அனுமதி அளிக்கப்பட்டது.
17 minutes ago
19 minutes ago
20 minutes ago