பெங்களூரில் திடீர் கனமழை
பெங்களூரு: பெங்களூரில் நேற்று மழை பெய்த திடீர் கனமழையால், சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. பெங்களூரில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், நேற்று மாலை 4:00 மணிக்கு மேல் திடீரென மழை பெய்தது. சிவாஜிநகர், காக்ஸ் டவுன், இந்திராநகர், ஹெச்.ஏ.எல்., ஹென்னுார் உட்பட நகரின், பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. மெஜஸ்டிக் பகுதியில் உள்ள, ரயில்வே சுரங்கபாதையில் தண்ணீர் தேங்கியதால், கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள், வாகனங்களை ஓட்டி சென்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் கிடைக்கும் இடங்களில் ஒதுங்கி நின்றனர். சிறிது நேரம் ஓய்வு எடுத்த மழை, இரவில் நீடித்தது.