பசுக்களை கடத்தி சென்ற கும்பலை விரட்டிய ஹிந்து அமைப்பினர்
சிக்கமகளூரு: சாலை ஓரத்தில் படுத்திருந்த பசுக்களை, சொகுசு காரில் கடத்தி சென்ற மர்ம கும்பலை, ஹிந்து அமைப்பினர் விரட்டி சென்று பிடிக்க முயற்சித்தனர். சிக்கமகளூரு மாவட்டம், கொப்பா நகரில் நேற்று முன் தினம் இரவு, இரண்டு பசுக்கள் சாலை ஓரம் படுத்திருந்தன. அப்போது சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள், பசுக்களை பலவந்தமாக காரில் ஏற்றி கடத்தி சென்றன.இதை பார்த்த ஹிந்து அமைப்பினர், வேறு ஒரு காரில் மர்ம கும்பலை விரட்டி சென்றனர். கொப்பாவில் இருந்து, 10 கி.மீ., துாரம் வரை விரட்டி சென்றனர். ஆனால் பசுக்களை கடத்திய கார், அதிவேகமாக சென்றதால், அதை பிடிக்க முடியாமல் ஹிந்து அமைப்பினர் திரும்பினர். இது குறித்து, கொப்பா போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தனர். கொப்பாவில் பசுக்களை கடத்தும் சம்பவங்கள், அடுத்தடுத்து நடக்கின்றன. இது குறித்து புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என, ஹிந்து அமைப்பினர் குற்றம்சாட்டினர். தற்போது பசுக்களை கடத்தி சென்றவர்களை கைது செய்யாவிட்டால், காலவரையற்ற போராட்டம் நடத்துவோம் என, எச்சரித்துள்ளனர்.