உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கிரஹ ஆரோக்யா திட்டம் தினேஷ் குண்டுராவ் தகவல்

கிரஹ ஆரோக்யா திட்டம் தினேஷ் குண்டுராவ் தகவல்

பெங்களூரு : சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி:நோயால் அவதிப்படும் மக்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில், 'கிரஹ ஆரோக்யா' திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டம் சோதனை முறையில் கோலார் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது; மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.திட்டம் வெற்றி அடைந்ததால், ஏப்ரல் முதல் வாரம், மாநிலம் முழுதும் 'கிரஹ ஆரோக்யா' விஸ்தரிக்கப்படும். சுகாதார ஊழியர்கள், மக்களின் வீடுகளுக்கு சென்று நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய், மனநிலை பாதிப்பு குறித்து பரிசோதிப்பர்.உடல் நிலை பாதிப்பு இருந்தால், மருந்துகள் கொடுப்பர். மருத்துவமனையில் சேர்க்க வேண்டி இருந்தால், அதற்கான வசதிகள் செய்யப்படும். இத்திட்டம் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை