உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஹோட்டல்கள் மூடல்; காய்கறிகள் விற்பனை சரிவு

 ஹோட்டல்கள் மூடல்; காய்கறிகள் விற்பனை சரிவு

பெங்களூரு: எல்.பி.ஜி., காஸ் இல்லாத காரணத்தால், பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பல ஹோட்டல்களில் உணவு மெனுக்கள் குறைக்கப்பட்டன. இதனால் காய்கறிகள் விற்பனை குறைந்துள்ளது. மேற்காசிய பிராந்தியத்தில் போர் நடப்பதன் விளைவாக, எல்.பி.ஜி., காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக காஸ் சிலிண்டர்கள் இல்லாததால், ஹோட்டல் தொழில் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. விறகு அடுப்பு பயன்படுத்தி சமையல் செய்ய வேண்டியுள்ளது. எனவே பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பல ஹோட்டல்களில் உணவு மெனுக்கள் குறைக்கப்பட்டுள்ளன. காய்கறி விவசாயிகள், வியாபாரிகள் ஹோட்டல்களை நம்பியுள்ளனர். ஹோட்டல்களில் மொத்தமாக காய்கறிகள் வாங்குவதால், வியாபாரிகள், விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது. ஆனால் இப்போது ஹோட்டல்கள் மூடப்பட்டதாலும், உணவு மெனுக்கள் குறைக்கப்பட்டதாலும், காய்கறிகள் வாங்குவது குறைந்துள்ளது. காய்கறிகள் விற்பனை ஆகாததால், வியாபாரிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். விவசாயிகளிடம் காய்கறி வாங்க முன் வரவில்லை. தேவை குறைந்ததால், விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இது விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. காய்கறிகள் விற்கப்படாமல் தேங்குவதால், மனம் நொந்த வியாபாரிகள், காய்கறிகளை குப்பை வாகனத்தில் கொட்டுகின்றனர். வீடுகளுக்கு காஸ் வினியோகம் இருப்பதால், காய்கறிகள் வாங்குகின்றனர். தெலுங்கு வருட பிறப்பு முடிந்த பின், திருமண சீசன் துவங்கும். அப்போது காய்கறிகள் விற்பனையாகலாம் என, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் காஸ் சிலிண்டர்கள் பற்றாக்குறை உள்ளதால், திருமணங்களும் தள்ளி வைக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ