உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  இண்டிகோ விமானங்கள் ரத்தாவதால் ஹோட்டல்களில் அறை வாடகை உயர்வு

 இண்டிகோ விமானங்கள் ரத்தாவதால் ஹோட்டல்களில் அறை வாடகை உயர்வு

பெங்களூரு: 'இண்டிகோ' விமானங்களின் போக்குவரத்தில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய பயணியர், ஹோட்டல்களில் தங்குகின்றனர். சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, ஹோட்டல் உரிமையாளர்கள, மூன்று மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். கடந்த சில நாட்களாக 'இண்டிகோ' விமான போக்குவரத்து நிறுவனத்தில் விமானங்கள் தாமதமாகிறது; ரத்து செய்யப்படுகிறது. ஊழியர் பற்றாக்குறையை காரணம் காண்பித்து, விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qnjv2bse&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பெங்களூரில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டிய பயணியர், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் தங்குகின்றனர். சூழ்நிலையை பயன்படுத்தி, ஹோட்டல் உரிமையாளர்கள் அறைகளின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். வழக்கமான நாட்களில், அறைகளின் தின வாடகை 3,938 ரூபாயாக இருக்கும். இப்போது 11,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சில ஹோட்டல்களில் 3,000 ரூபாயாக இருந்த, அறை வாடகை கட்டணம் 10,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. கட்டாயத்தின் பேரில் அதிக வாடகை கொடுத்து தங்குகின்றனர். இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனத்தின் பிரச்னையால், ஏற்கனவே தனியார் ஆம்னி பஸ்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இப்போது ஹோட்டல் அறைகளின் வாடகை கட்டணத்தை உயர்த்தி, பயணியருக்கு பொருளாதார சுமையை ஏற்படுத்துகின்றனர். இது குறித்து, பெங்களூரின் தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றும் ப்ரீத்தி கூறியதாவது: குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க, டில்லிக்கு புறப்பட்டேன். விமான போக்குவரத்து ரத்தானதால், விமான நிலைய சுற்றுப்பகுதியில் ஹோட்டலில் தங்க, அறை வாடகை கட்டணத்தை விசாரித்தேன். 7,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் கேட்டனர். எனவே வாடகை காரில் 2,500 ரூபாய் செலுத்தி, வீட்டுக்கு திரும்பினேன். நாங்கள் செய்யாத தவறுக்கு, சுமையை அனுபவிக்கிறோம். இந்த செலவை இண்டிகோ நிறுவனம் ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ