உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மனித - விலங்கு மோதல் குறைவு: அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தகவல்

 மனித - விலங்கு மோதல் குறைவு: அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தகவல்

சாம்ராஜ் நகர்: ''பண்டிப்பூர் தேசிய பூங்கா, நாகரஹொளே புலிகள் வனப்பகுதியில் சபாரி நிறுத்தப்பட்டதால், மனித - விலங்கு மோதல் குறைந்து உள்ளது,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார். சாம்ராஜ் நகர் கொள்ளேகாலில் நேற்று அவர் அளித்த பேட்டி: வாழ்க்கை, வாழ்வாதாரம் இரண்டு முக்கியம். பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ உரிமை உண்டு. வனம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசும், அதிகாரிகளும் பொறுப்புடன் செயல்படுகின்றனர். பண்டிப்பூர் தேசிய பூங்கா, நாகரஹொளே புலிகள் வனப்பகுதியில் சபாரி நிறுத்தப்பட்டதால், மனித - விலங்கு மோதல் குறைந்து உள்ளது. மீண்டும் சபாரியை துவக்குவது குறித்து விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், பொது மக்களுடன் மதிப்பாய்வு செய்த பின் முடிவெடுக்கப்படும். அர்ஜுனா யானை நினைவு சின்னம் பகுதியில் இன்னும் சில அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். உள்ளூர் எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். குளிர்கால கூட்டத்தொடர் முடிந்ததும், இம்மாதம் நினைவு சின்னம் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி