உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மனைவியுடன் கள்ளத்தொடர்பு நண்பரை கொன்ற கணவர் கைது

மனைவியுடன் கள்ளத்தொடர்பு நண்பரை கொன்ற கணவர் கைது

கொப்பால்: மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பரை கொலை செய்த கணவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.கொப்பால் மாவட்டம், கங்காவதி தாலுகாவின், விட்டலாபுரா கிராமத்தை சேர்ந்தவர்கள் நாகராஜ், 28; ஹனுமந்தப்பா, 30. இவர்கள் அக்கம், பக்கத்தில் வசிக்கின்றனர். நெருங்கிய நண்பர்களான இவர்கள், ஒரே தட்டில் சாப்பிட்டு வளர்ந்தவர்கள்.கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன், ஹனுமந்தப்பாவுக்கு திருமணம் நடந்தது. தம்பதி அன்யோன்யமாக இருந்தனர். சமீப காலமாக ஹனுமந்தப்பாவின் மனைவிக்கும், நாகராஜுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. கணவர் இல்லாத நேரத்தில், இருவரும் உல்லாசமாக இருந்தனர்.ஓராண்டுக்கு முன், நாகராஜும், ஹனுமந்தப்பாவின் மனைவியும் வயலில் நெருக்கமாக இருந்தனர். அப்போது ஆடு மேய்க்க சென்ற ஹனுமந்தப்பா, நேரில் பார்த்து கோபம் அடைந்தார். அன்று முதல் நண்பர்களுக்கு இடையே, மனஸ்தாபம் ஏற்பட்டது.மனைவியை தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டார். நண்பரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த விஷயம், ஊருக்கு தெரிந்ததால் தர்ம சங்கடத்துக்கு ஆளான நாகராஜ், கிராமத்தை விட்டு வெளியேறினார்.ஓராண்டாக கிராமத்தில் இல்லாத அவர், சில நாட்களுக்கு முன் ஊருக்கு வந்தார்.நாகராஜ், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணியளவில் கங்காவதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். இதையறிந்த ஹனுமந்தா, தன் சகோதரர் சித்தராமேஷ் 28 உடன் சென்று வெங்கடகிரி புறநகரில், அவரை வழிமறித்தார். அவர் பைக்கை நிறுத்திவிட்டு தப்பியோடினார். ஆனாலும் விரட்டி சென்று கோடாரியால் வெட்டி கொலை செய்தனர். அதன்பின் ஹனுமந்தப்பா, கனககிரி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அவரது சகோதரர் நேற்று கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை