மேலும் செய்திகள்
மரத்தில் சரக்கு ஆட்டோ மோதி மூன்று பேர் பலி
31-Oct-2025
பாகல்கோட்: தங்கள் வீட்டு கார் ஓட்டுநருடன் சிரித்து பேசியதை சகிக்க முடியாத கணவர், மனைவியையும், கார் ஓட்டுநரையும் வெறி கொண்டு தாக்கினார். பாகல்கோட் நகரின் துளசிகேரி கிராமத்தில் வசிப்பவர் யங்கப்பா சூரி, 30. இவரது மனைவி போரவ்வா, 25. சரக்கு வாகனம் வைத்திருந்த யங்கப்பா, அதை ஓட்ட பிரகாஷ், 28, என்பவரை நியமித்திருந்தார். பணி நிமித்தமாக அவ்வப்போது யங்கப்பாவின் வீட்டுக்கு வந்ததால், போரவ்வாவின் அறிமுகம் அவருக்கு ஏற்பட்டது; நட்பாக பேசிக் கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு, இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த யங்கப்பா கோபமடைந்தார். தன் நண்பர்களின் உதவியுடன், மனைவியையும், ஓட்டுநரையும் கடத்தி, மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கொலை வெறியோடு தாக்கினார். இதை வீடியோவில் பதிவு செய்து கொண்டார். தங்களை விட்டு விடும்படி இருவரும் கதறியும் கேட்கவில்லை. தாக்குதலில் காயமடைந்த போரவ்வா, பிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்கள் தாக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. இதை கவனித்த பாகல்கோட் நகர போலீசார், யங்கப்பா சூரி, பரசப்பா மாதரா, துளசப்பா சூரி உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
31-Oct-2025