உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கணவர் தொல்லை மனைவி தற்கொலை

கணவர் தொல்லை மனைவி தற்கொலை

துமகூரு : திருமணமான நான்கு மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். துமகூரு மாவட்டம், சிரா தாலுகாவின் கிலார்தஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ஜெய் மாருதி நாயக், 27. இவரும், பக்கத்து கிராமமான புகாபட்டணாவை சேர்ந்த பிருத்விராணி, 20, என்ற பெண்ணும் நான்கு ஆண்டுகளாக காதலித்தனர். நான்கு மாதங்களுக்கு முன், தர்மஸ்தலாவில் இவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் சிராவின் ஜோதி நகரில் தம்பதி வசித்தனர். ஜெய் மாருதி நாயக், திருமணத்துக்கு முன் காதலித்த மற்றொரு பெண், போன் செய்து, 'என்னை காதலித்துவிட்டு, வேறு ஒருத்தியை நீ திருமணம் செய்து கொண்டாயா' என கேட்டு தகராறு செய்துள்ளார். இதையறிந்த மனைவி பிருத்விராணி, கணவரிடம் அந்த பெண்ணை பற்றி விசாரித்துள்ளார். இவ்விஷயமாக தம்பதிக்கிடையே தினமும் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது மனைவியை கணவர் அடிக்கவும் செய்து உள்ளார். கணவரின் செயலால் மனம் நொந்த பிருத்விராணி, மூன்று முறை தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை, மனைவியின் பெற்றோருக்கு போன் செய்து, 'உங்கள் மகள் இறந்து கிடக்கிறார்; உடனடியாக வாருங்கள்' என, ஜெய் மாருதி நாயக் கூறினார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், மகளின் வீட்டுக்கு வந்து பார்த்த போது, கட்டிலில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் கருப்பு நிறத்தில் காய அடையாளம் இருந்தது. மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. சிரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும், அங்கு வந்து உடலை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், கணவரின் இம்சையால் பிருத்விராணி, துாக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. ஜெய் மாருதி நாயக்கை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி