மேலும் செய்திகள்
நந்தனார் கல்விக்கழக இடத்தை மீட்க கோரிக்கை
30-May-2026
சம்பிகேஹள்ளி: வயதான காலத்தில் மகனுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என்பதால், பார்வையற்ற, 77 வயது மனைவியை கழுத்தை நெரித்து கொன்று, 83 வயது முதியவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் நந்தன்பிரசாத், 83. இவரது மனைவி சுமித்ரா தேவி, 77. தம்பதியின் மகன் கிரண்குமார், 50. பெங்களூரு விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். சம்பிகேஹள்ளியில் அடுக்கு மாடி குடியிருப்பில் மகன், மருமகள், பேரப்பிள்ளைகளுடன், நந்தன் பிரசாத், சுமித்ரா தேவி தம்பதி வசித்தனர். சுமித்ராவுக்கு வலது கண் பார்வை தெரியாது; காதும் சரியாக கேட்காது. நந்தன் பிரசாத்துக்கும் இதயம் தொடர்பான பிரச்னை இருந்தது. இதற்காக, அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இந்நிலையில், வயதான காலத்தில் மகனுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என நினைத்த நந்தன் பிரசாத், தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் இறந்த பின், மனைவியை கவனிக்க ஆள் இல்லாமல் போய் விடுமே என்று நினைத்த அவர், மனைவியை கொன்று தற்கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிட்ட பின், நந்தனும், சுமித்ராவும் தங்கள் அறைக்கு துாங்க சென்றனர். நள்ளிரவில் சுமித்ராவின் கழுத்தை நெரித்து, நந்தன் கொலை செய்தார். பின், அவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை, நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த கிரண்குமார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, தாயை கொன்று, தந்தை தற்கொலை செய்தது தெரிந்தது. அவர் அளித்த புகாரின் படி, சம்பிகேஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
30-May-2026