உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  காதல் மனைவி கொலை கணவர் தலைமறைவு

 காதல் மனைவி கொலை கணவர் தலைமறைவு

பெலகாவி: காதல் மனைவி விவாகரத்து கேட்டதால், கொலை செய்து விட்டு கணவர் தலைமறைவானார். பெலகாவி மாவட்டம் பைலஹொங்கல் நகரின் கொல்லாரஹோணி பகுதியை சேர்ந்தவர் ராஜு, லட்சுமி, 31, தம்பதி. இருவரும் காதலித்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அடிக்கடி சண்டை போட்டு வந்தனர். இதனால் விவாகரத்து செய்து விடலாம் என கணவரிடம் லட்சுமி கூறி உள்ளார். நேற்று காலையில் லட்சுமி வேலை செய்யும் இடத்துக்கு சென்ற அவர், மதியம் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறினார். அவரும், கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அமட்டூர் கிராமம் அருகே செல்லும் போது மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ராஜு, மனைவியை கீழே தள்ளி, கல்லை அவர் தலைமீது போட்டு, கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார். பைலஹொங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !