கணவரின் கள்ளக்காதல் மனைவி தற்கொலை
ஹெப்பால் : கணவருக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால், மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பெங்களூரு, ஹெப்பால் கனகநகரை சேர்ந்தவர் பஷீர் உல்லா, 31. இவருக்கும், சாம்ராஜ்பேட் பாதராயனபுராவின் பஹார் அஸ்மா, 29 என்ற பெண்ணுக்கும் இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.பஷீர் தனியார் விமான நிறுவனத்தில் வேலை செய்தார். மாத சம்பளமாக 80,000 ரூபாய் வாங்கினார். திருமணம் முடிந்த ஆறு மாதத்தில், பஷீருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். இதுபற்றி கேள்வி எழுப்பியதால் மனைவியுடன், பஷீர் தகராறில் ஈடுபட்டார். மனைவி குடும்பத்தினர் புத்திமதி கூறியும் கேட்கவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பஹார் அஸ்மா, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கள்ளத்தொடர்பை தட்டி கேட்டதால் பஹார் அஸ்மாவை கொலை செய்து, உடலை துாக்கில் தொங்க விட்டதாக பஷீர் மீது, ஹெப்பால் போலீசில் புகார் செய்யப்பட்டது. அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.