உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் விடுதிகளில் சுகாதாரம் கேள்விக்குறி 

பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் விடுதிகளில் சுகாதாரம் கேள்விக்குறி 

பெங்களூரு: 'பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் தங்கும் விடுதிகளில் சுகாதாரம் சரியில்லாமல் உள்ளது' என, கர்நாடக சட்டசபையின் கூட்டு அவைக்குழு தெரிவித்து உள்ளது. கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் படிப்பதற்காக 2,504 தங்கும் விடுதிகள் உள்ளன. இவை மாநில சமூக நலத்துறையால் நடத்தப்படுகின்றன. இந்த விடுதிகளின் தரம் குறித்து கர்நாடக சட்டசபை கூட்டு அவைக்குழு சோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் தங்கும் விடுதியில் 2.70 லட்சம் மாணவர்கள் உள்ளனர். பெரும்பாலான விடுதிகளில் மாணவர்கள் தங்குவதற்கான வசதிகள் முறையாக இல்லை. ஐந்து பேர் வசிக்கும் அறையில், ஏழு பேர் வசிக்கின்றனர். விடுதியில் காவலாளிகள் இல்லை. 1,297 காவலாளிகளுக்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும். காவலாளிகள் இல்லாததால், விடுதிகளில் யார் வருகின்றனர்; செல்கின்றனர் என்பது குறித்த தகவல் இல்லை. போதைப்பொருள் பயன்பாடும் உள்ளது. விடுதிகளில் சுகாதார வசதிகளும் மோசமாக உள்ளன. கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதில்லை. அரசு குறைந்த நிதி ஒதுக்குவதும் காரணமாக உள்ளது. விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. புதிதாக விடுதிகள் திறக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ