உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  எனக்கு அரசியல் தெரியும் முதல்வர் சிவகுமார் பேச்சு

 எனக்கு அரசியல் தெரியும் முதல்வர் சிவகுமார் பேச்சு

பெங்களூரு: ''எனக்கு அரசியல் தெரியும். நான் கால்பந்து விளையாட மாட்டேன். ஆனால், சதுரங்கம் நேர்த்தியாக விளையாடுவேன்,'' என, முதல்வர் சிவகுமார் கூறினார். சட்டசபையில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களை முதல்வர் சிவகுமார் அறிமுகம் செய்து வைத்தார். பின், அவர் பேசியதாவது: இதே சட்டசபையில் சித்தராமையாவுக்கு அருகில் துணை முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். தற்போது, முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். எனக்கு அரசியல் தெரியும். நான் கால்பந்து விளையாட மாட்டேன். ஆனால், சதுரங்கம் நேர்த்தியாக விளையாடுவேன். முதல்வர் பதவியில் இருந்து கொண்டு, அனைத்து எம்.எல்.ஏ.,க் களையும் மதிப்பது என்னுடைய கடமை. நான் யாரையும் வெறுப்பதில்லை. கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை மறந்து விடுவோம். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. நல்ல பணிகள் பாராட்டப்படும். என்னுடைய அதிகாரத்தை தவறான காரணங்களுக்கு உபயோகிக்க மாட்டேன். அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை