அமைச்சர் பதவி கேட்பேன்! துணை சபாநாயகர் அதிரடி
ஹாவேரி: ''மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை சந்திக்கும்போது, எனக்கு அமைச்சர் பதவி வழங்கும்படி கேட்பேன்,'' என, துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி கூறி உள்ளார்.ஹாவேரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெங்களூரு வந்துள்ள மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை நாளை சந்திக்க உள்ளேன். அரசின் சாதனைகள், என் தொகுதியில் என்ன மேம்பாட்டுப் பணி நடக்கிறது என்பது பற்றி அவர் என்னிடம் விவாதிக்கும் வாய்ப்பு உள்ளது.நான் துணை சபாநாயகர் ஆன பின், என் தொகுதிக்கு கேட்ட நிதியை அரசு கொடுத்துள்ளது. இன்னும் நிதி தேவைப்படுகிறது. கடவுளால் கூட நமக்கு அனைத்தையும் கொடுத்துவிட முடியாது.எனக்கு அமைச்சர் பதவி தருவதாக, மேலிட பொறுப்பாளர் முன்பே கூறி இருந்தார். நாளை அவரை சந்திக்கும்போது அமைச்சர் பதவி வழங்கும்படி கேட்பேன். இதில் எந்த தவறும் இல்லை. எனக்கு அமைச்சர் பதவி வழங்குவது கட்சி மேலிடம் முடிவு. எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருப்பது சகஜம். இதில் எந்த தவறும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.