பாசுமதி அரிசியை ரவை போல உடைத்து வைத்துக் கொண்டால்...
– நமது நிருபர் – l கோதுமை மாவில் ஒரு டம்ளர் மோர் சேர்த்து கரைத்து, தோசை சுட்டால் தனி சுவையுடன் அருமையாக இருக்கும் l செட்டிநாடு ஸ்டைலில் நண்டு குழம்பு செய்ய வேண்டும் என்றால், மிக்ஸியை தவிர்த்து ஆட்டுக்கல்லில் மசாலா அரைத்து சேர்த்தால் சுவை துாக்கலாக இருக்கும் l இன்ஸ்டன்ட் மாவில் குலாப் ஜாமூன் தயாரிக்கும் போது, சிறிதளவு வெண்ணெய் சேர்த்தால் ஜாமூன் மென்மையாகவும், மிருதுவாகவும் கிடைக்கும் l எந்த வகையான ஊறுகாயாக இருந்தாலும், அதனுடன் கடுகு எண்ணெய் சேர்த்தால் நீண்ட நாட்கள் கெட்டு போகாது l கிழங்கு, பருப்பு, பயிறு வகைகளை வேக வைக்கும் போது, நன்றாக வெந்த பின் உப்பு சேர்ப்பது நல்லது l பாசுமதி அரிசியுடன் தேவையான அளவு ஏலக்காய் சேர்த்து வறுத்து, ரவை போல உடைத்து வைத்து கொண்டால், தேவையான நேரத்தில், விரைவில் பாயசம் செய்யலாம் l பருப்பு ரசம் செய்யும் போது, அதனுடன் ஜாதி நார்த்தங்காய் சாற்றை பிழிந்து விட்டால் சுவை அசத்தலாக இருக்கும் l உருளைகிழங்கு காரக்கறியில் அரை கரண்டி, புளிப்பில்லாத கெட்டி தயிர் சேர்த்து வதக்கினால், கூடுதல் சுவை கிடைக்கும் l வறுவல் அல்லது கூட்டில் உப்பு, காரம் அதிகமாகி விட்டால், ரஸ்கை பொடியாக்கி துாவி விட்டால் சரியாகி விடும்.