உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மே டே அறிவிப்புடன் பெங்களூரில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம் 

மே டே அறிவிப்புடன் பெங்களூரில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம் 

பெங்களூரு: 'மே டே' அறிவிப்புடன், இண்டிகோ விமானம், பெங்களூரு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த 168 பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து லண்டனுக்கு கடந்த 12ம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி 241 பேர் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பு 'மே டே' எனும் அவசர அறிவிப்பில் விமானி தொடர்பு கொண்டது தெரிந்தது.இந்நிலையில் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு, 19ம் தேதி மாலை 4:40 மணிக்கு 168 பயணியருடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது. சென்னையில் இரவு 7:45 மணிக்கு தரையிறங்க முயன்றபோது, தரையிறங்கும் கியரின் சக்கரங்கள் ஓடுபாதையை தொட்டது. விமானம் தரையிறங்குவதில் சிக்கல் என்பதை உணர்ந்த விமானிகள், விமானத்தை தரையிறக்க முயற்சிக்காமல் வானில் வட்டமடிக்க ஆரம்பித்தனர்.பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 30 மைல் துாரத்தில் இருந்தபோது, விமானத்தில் எரிபொருள் குறைந்ததை விமானிகள் அறிந்தனர். ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சிய விமானிகள், பெங்களூரு விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு, 'மே டே' அறிவிப்பு கொடுத்தனர்.உடனடியாக தரையிறங்க அனுமதி கிடைத்ததால், எந்தவித பாதிப்பும் இன்றி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எரிபொருள் நிரப்பிக் கொண்டு மீண்டும், சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. 168 பயணியருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை