மேலும் செய்திகள்
தங்கவயல் போலீசார் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை
17-May-2025
மாலுார்: கர்நாடக அரசின் மலிவு விலை உணவு வழங்கும் திட்டமான 'இந்திரா உணவகம்' மாலுாரில் திறக்கப்பட்டது.கோலார் மாவட்டத்தில் மாலுார், தங்கவயல் ஆகிய இரண்டு தாலுகாக்களில் இந்திரா கேன்டீன் மே 28ம் தேதி திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் கோலார் -- சிக்கபல்லாப்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் தேர்தல் நடப்பதால் திறப்புவிழா ஒத்திவைக்கப்பட்டது. கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் வருகைக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.இந்நிலையில், தங்கவயலுக்கு வருகை தந்த கோலார் மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி, கேன்டீன் கட்டடப் பணிகளை ஆய்வு செய்தார். விரைவில் திறக்கப்படும் என்று உறுதி அளித்தார். தன் பிறந்த நாள் தினமான நேற்று முன்தினம், மாலுார் பஸ்நிலையம் அருகே, கேன்டீனை திறந்துவைத்தார். தாசில்தார் எம்.வி.ரூபா, டவுன் சபை தலைவர் விஜயலட்சுமி உட்பட அதிகாரிகள், டவுன் சபை உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் இந்திரா கேன்டீன் கட்டடம் தயார் நிலையில் உள்ளது. இதுவும் விரைவில் திறக்கப்படும் என தெரிகிறது.
17-May-2025