மேலும் செய்திகள்
தி.மு.க. - அ.தி.மு.க.வில் யாருக்கு 'சீட்?'
17-Feb-2026
பங்கார்பேட்டை: ''பங்கார்பேட்டை தொகுதியில் 320 ஏக்கரில் இண்டஸ்ட்ரியல் டவுன் ஷிப் ஏற்படுத்தப்படும். 30 கோடி ரூபாய் செலவில் புதிய சாலைகள் அமைக்கப்படும்,'' என்று பங்கார்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., எஸ்.என்.நாராயணசாமி தெரிவித்தார். பங்கார்பேட்டை -- தங்கவயல் சாலையில் உள்ள தாசரஹொச ஹள்ளி என்ற இடத்தில் உள்ள சக்சஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் 11ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. பள்ளி நிர்வாகத் தலைவர் வக்கீல் உதயகுமார் தலைமை வகித்தார். பங்கார்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., எஸ் என்.நாராயணசாமி பேசுகையில், ''பங்கார்பேட்டை டி.கே.ஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாசரஹொசஹள்ளி கிராமத்தில் 800 மாணவர்கள் படிக்கும் பள்ளியின் தரம் மேலும் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. ''பாரத் நகர், எம்.வி.நகர், விஜயநகர், வசந்த நகர், சின்ன கோட்டே உள்ளிட்ட பகுதிக்கு ஒரு தரமான பள்ளி கிராமத்தில் உருவாகி இருப்பது பெருமை அளிக்கிறது. ''இதே பகுதியில் 320 ஏக்கரில் இண்டஸ்ட்ரியல் டவுன் ஷிப் தொழில் நகரம் ஏற்படுத்தப்படும். 25,000 பேர் வேலை செய்யும் வகையில் தொழிற்சாலைகள் உருவாகிறது. ''பங்கார்பேட்டையில் இருந்து எக்ஸ்பிரஸ் காரிடார் சாலை வரை 30 கோடி ரூபாய் செலவில் டபுள் ரோடு ஏற்படுத்தப்படும். அதற்கான பணிகள் விரைவில் துவங்கும். சுத்தமான குடிநீர் கிடைக்க மினி வாட்டர் பிளான்ட் ஏற்படுத்தப்படும்,'' என்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. புதிய சிவில் நீதிபதியாக தேர்வான சின்கோட்டையை சேர்ந்த அஸ்வினி பாராட்டப்பட்டார்.
17-Feb-2026